ரிஸ்க் எடுத்து நடித்து :30 லட்சம் மட்டுமே சம்பளம்

ரிஸ்க் எடுத்து நடித்து :30 லட்சம் மட்டுமே சம்பளம்

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சூரி. எனினும் குறிப்பாக இவர் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதன்பின்னர் அவரை பரோட்டா சூரி என்று அழைக்கும் அளவுக்கு மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், அஜித், ரஜினி என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்த சூரி, தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அதன்படி நடிகர் சூரி நாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் விடுதலை.அத்தோடு வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மறுபுறம் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 31) ரிலீஸ் ஆனது. அத்தோடு திரையரங்குகளில் வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இப்படம். குறிப்பாக நடிகர் சூரியின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

விடுதலை விஜய் சேதுபதி சூரி

அதுமட்டுமின்றி ஸ்டண்ட் காட்சிகளிலும் சூரி மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவ்வாறுஇருக்கையில் , விடுதலை படத்துக்காக நடிகர் சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி விடுதலை படத்தில் நடித்ததற்காக அவர் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியதாகவும், தற்போது இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆக உள்ளதால், அத்தோடு  10 லட்சம் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 விடுதலை soori vijaysethubathi vetrimaran

காமெடியனாக நடிக்கவே இதைவிட அதிகளவில் சம்பளம் வாங்கி வந்த சூரி, ஹீரோவாக நடிக்க ரூ.40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதனால் நடிகர் சூரி, இந்த அளவுக்கு குறைந்த சம்பளம் வாங்கி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அத்தோடு  விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூரி தற்போது மேலும் மூன்று திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/F7x-CHR7GAU

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button