மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்து – மாணவர் ஒருவர் பலி ; 9 மாணவர்கள் காயம்!

மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்து – மாணவர் ஒருவர் பலி ; 9 மாணவர்கள் காயம்!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் பயணித்த கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த மாணவர்கள் மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றினை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

Sri Lanka Police, Sri Lanka Police Investigation, Accident, Sri Lankan Schools,

விபத்தில் பலியான 19 வயதான மாணவன் பலாபத்வல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பலபாத்வல பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில், நட்பு ரீதியான சந்திப்புக்கு சென்று திரும்பும் வழியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button