பாதி எரிந்த உடல்களின் உறுப்புகளை இழுத்து தெருக்களில் போடும் நாய்கள்? அதிர்ச்சிகர தகவல்கள்

கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூருவில் காம்ராஜ்பேட் இடுகாடு ஏதோ சினிமா தியேட்டர் போல் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டியுள்ளது, அங்குள்ள நிலைமைகளை வெட்டவெளிச்சமாக்குகிறது.

அவசரமாக உருவாக்கப்பட்ட பல இடுகாடுகளில் உடல்களை சரியாக எரிக்க எரிபொருள் இல்லாததால் பாதி எரிந்தும் எரியாததுமான உடல் உறுப்புகளை நாய்கள் இழுத்துச் சென்று தெருவிலும் வீடுகளின் வாசல்களிலும் போட்டு விட்டுச் செல்வதாக அங்கு குடியிருப்போர் புகார் எழுப்பியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,368 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 217 பேர் மரணமடைய அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 16,011 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் மகாராஷ்டிராதான் 70,284 மரணங்களுடன் முதலிடம் வகிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

4,622 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,417 பேர் கொரோனாவுக்காக மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் காம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் 2 மணி நேரத்தில் 24 நோயாளிகள் மரணமடைந்தது துயருக்கு மேல் துயரமாக நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

சில பேருக்கு தங்கள் உறவினர் உடலை எரித்து காரியம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்கின்றனர். இன்றும் கூட அதே நிலைமைதான் நீடிப்பதாக கூறப்படுகிறது.

கிடனஹல்லி சுடுகாட்டுக்கு உடலை கொண்டு வந்த ஒருவர் அனைத்து இடுகாடுகளுக்கும் சென்று வந்துள்ளார் அங்கு எல்லாம் ஹவுஸ் ஃபுல் முடிந்து விட்டது என்று அனுப்பிவிட்டதாகக் கூறுகின்றனர்.

சில இடுகாடுகளில் வரிசையாக 10 ஆம்புலன்ஸ்களில் உடல்களுடன் நிற்கின்றன. எரிபொருள்கள் பற்றாக்குறை வெறட்டி, விறகுகள் பற்றாக்குறையினால் உடல்களை முழுதும் எரிக்க முடியவில்லை.

குடும்ப உறுப்பினர் இருக்கும் வரை சுடுகாட்டு வெட்டியான் இருக்கிறார் அவர்கள் நகர்ந்த பிறகு பாதி எரிந்தும் எரியாத உடல்களின் உறுப்புகளை நாய்கள் இழுத்துச்செல்லும் காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. பெங்களூரு தாவனகெரே இடுகாட்டில் இந்தக் காட்சிகள் சகஜமாக நடக்கின்றன.

அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முன்னால் காலையில் எழுந்து பார்த்தால் பாதி எரிந்த உடல்களின் உறுப்புகள் சில கிடப்பதாக அங்குள்ளவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *