தேனை தலையில் தடவினால் வெள்ளை முடி வரும் என்பது உண்மையா?

தேனை தலையில் தடவினால் வெள்ளை முடி வரும் என்பது உண்மையா? தேனை தலைல தேய்ச்சா நரைச்சி போய்டும்னு சின்ன வயசுல இருந்தே சொல்லி பயமுறுத்தி வச்சிருக்காங்க.

தேன்:

இது இயற்கையான கண்டிஷனர் மாதிரி, முடி வளர உதவுது. இதில இருக்குற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முடி சார்ந்த பிரச்சினைகளை எல்லாம் நீக்குது.

தேன் அப்டின்னாலே இயற்கையோட வரப் பிரசாதம் அப்டின்னே சொல்லலாம். காரணம் இது நம்ம முடிக்கு தேவையான ஈரப்பதத்தை தருது. தலையில் உள்ள ஈரப்பதத்த தக்கவச்சு முடி வறண்டு போகாம பாதுகாக்குது.

 

இதில இருக்குற ஆன்டி பாக்டீரியல் அப்புறம் ஆன்டி செப்டிக் தன்மை, முடில ஏற்படுற அழற்சி, தொற்றுகளை எல்லாம் போக்குது.

சொரியாஸிஸ் மாதிரி நோய்களை எதிர்த்து போராடுது. தொற்றுஏற்படுத்தும் பாக்டீரியாவ எல்லாம் அழிச்சு முடியை வலுவானதா மாத்தி முடியோட பாதுகாப்புக்கு ஆதாரமானதா இருக்குது.

முடிக்கு பிளீச்சிங் எல்லாம் பண்ணுவீங்கள்ல அதுல தேன் முக்கியமானது அப்டின்னு சொன்னா எப்டி இருக்கும். ஆனா அதுதான் உண்மை.

இதை முடியில அப்ளை பண்ணும்போது இயற்கையான நிறத்த கொடுத்து முடிய பளபளப்பாவும், மென்மையாவும் மாத்திடும்.

நாம தினமும் வெளிய போகும் போது நம்ம முடி அழுக்கு, மாசு, சூரிய ஒளி, தூசி இதால வறண்டுபோய் பொழிவிழந்துடும். தேன் முடியோட வேர்க்காலுக்கு போய் அதோட அடிப்பகுதிய ரொம்ப உறுதியானதா மாத்துது.

காண்டா மிருகத்தின் கொம்பில் இருக்கும் அதீத சக்தி..? அறியாத தகவல்.!!

நன்றி…

தேன்பற்றி கேள்வி கேட்டதுக்கு…

குறிப்பு:

பேச்சு வழக்கில் பதில்களை தந்துள்ளேன். சிலர் வேண்டி கேட்டதற்கிணங்க. கொடுக்கப்படும் பதிலானது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைவிட சிலருக்கு புரியும் வண்ணம் எழுதினாலும் தவறில்லை என நினைக்கிறேன். உரைநடை போன்ற பதில்களை வாசிப்பவர்கள் திடீரென இந்த பதிலை வாசிக்க நேர்ந்தால் ஒரு சிறிய மாற்றம் அவர்களுக்கு தோன்றும். அது இன்னும் அவர்களுக்கு வாசிக்கும் உத்வேகத்தை அல்லது சிறிய இடைவெளியை அளிக்கும் என நம்பியே பேச்சு வழக்கில் கொடுத்தேன்.

விலங்கியல் மாணவன்

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *