தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழ் அகதிகள் : அதிர்ச்சி சம்பவம்!

தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழ் அகதிகள் : அதிர்ச்சி சம்பவம்! இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே யுவதி தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து அவர்கள் வெளியிட்ட காணொளி வெளியாகியுள்ளது.

தமிழ் அகதிகள், தற்கொலைக்கு, இலங்கை தமிழ் அகதிகள், அதிர்ச்சி சம்பவம், ருவாண்டா
தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழ் அகதிகள்

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது தமது சுயமரியாதையை இழப்பது போன்று உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே வாழ்க்கை கடந்து செல்வதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.இவர்களுடன், மேலும் சுமார் 65 பேர் டியாகோ கார்சியா தீவில் உள்ளதாகவும் விலங்குகளை போன்று அடைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தமிழ் அகதிகள், தற்கொலைக்கு, இலங்கை தமிழ் அகதிகள், அதிர்ச்சி சம்பவம், ருவாண்டா
தமிழ் அகதிகள்

உயிர்வாழ்வதற்கான சுழல் அந்த தீவிலும் தற்போதுள்ள தாம் தங்கியுள்ள ருவாண்டா தலைநகரமான கிகாலியும் வாழ முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் கூறுகையில் தான் இந்தியாவில் பிறந்த நாடற்ற மனிதன் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த போதும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்கின்றார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இரத்த வாந்தி எடுப்பதாவும் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்தால் புகைப்படம் எடுக்குமாறும் இரத்தத்தை கையில் எடுத்து வருமாறு குறிப்பிடுவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.

சிறைக் கைதிகளுக்கு கூட ஒருசில சுதந்திரம் உள்தாகவும் ஆனால் தமக்கு அந்த சுதந்திரம்கூட இல்லாத அடிமைகளாக வாழ்வதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

அதேவேளை சட்டவிரோத பயணங்கள் உயிராபத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் மக்கள் இன்னும் ஐரோப்பிய நாடுகளுக்கு இவ்வாறு பயணம் செய்வது குறையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=qf42sbogqME

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button