தமிழினத்தை முதுகில் குத்திய நவீன காக்கை வன்னியன் சுரேன் சுரேந்திரன்

தமிழினத்தை முதுகில் குத்திய நவீன காக்கை வன்னியன் சுரேன் சுரேந்திரன்

தமிழினத்தை முதுகில் குத்திய நவீன காக்கை வன்னியன் சுரேன் சுரேந்திரன்

தமிழர் இழந்த இறைமையை வென்றெடுப்பது, தமிழீழ மக்களின் எல்லைகளை பாதுகாப்பது” என்ற சிந்தனையுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட உலக தமிழர் பேரவை GTF அமைப்பு இன்று ஒரு சில வல்லரசுக்களின் கைக்கூலிகளாகி இன்று ஒரு சிலரால் கொண்டு நடத்தப்படுகிறது.

உலக தமிழர் பேரவையினரின் செயற்பாடுகள் தொடர்பாக தமிழர்களிடமிருந்து கடுமையான கண்டனக்குரல் முன்வைக்கப்படும் நிலையில், நிராகரிக்கப்பட்ட உலக தமிழர் பேரவையை அன்புடன் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து வரவேற்றுள்ளனர்.

இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருடன் ரவூப் ஹக்கீம், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.யார் இந்த சுரேன் சுரேந்திரன்​

​புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு கூட்டாக செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவை தற்போது ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் (திரு.சுரேன் சுரேந்திரன், மதகுரு எஸ். ஜே. இமானுவெல் ) செயற்பட்டு இலங்கை இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஊதுகுழலாக இயங்குகின்றது.

cDqoHdPerCtyBBMhC0vQ

அதிலும் குறிப்பாக இலங்கையை பிளவுபடுத்துவது தமது நோக்கமல்ல என சிங்கள பேரினவாத பிக்குகளிடம் சுரேன் சுரேந்திரன் எடுத்துரைத்துள்ளது என்பது யூதாஸ் காட்டிக்கொடுத்து ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டார், ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் சுரேன் சுரேந்திரன் சேர்ந்து சிலுவையில் அறைந்துவிட்டனர்

தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிராகரிக்கும் ஒன்றுமில்லாத யாப்பைத் தலையில் வைத்துக் கொண்டு தனது தலைவர் சிறிசேனா ,ரணிலின் ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சொல்லி தமிழினத்தையே ஏமாற்றுகின்றார் மதகுரு எஸ். ஜே. இமானுவெல்.

I6fS83mgJp2BFVBIQmv2

இது போன்று தமிழர்களின் சுதந்திர தாகத்தை சிதைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு , உலக தமிழர் பேரவை GTF, மற்றும் இன்னும் சில தப்புத் தாளங்களான ​ எட்டப்பன் ,காக்கை வன்னியனின் பரம்பரையின் கவனத்திற்கு ‘தமிழ் மக்களுக்கு நீதி கிடைகக் துணிச்சலுடனும் முதுகெலும்புடன் செயற்படாத நீங்கள் தமிழ்த் தேசிய ஆரசியலிருந்து ஒதுங்குங்கள்’ எட்டப்பன் ,காக்கை வன்னியனின் பரம்பரையிடமிருந்து தமிழினம் அவதானித்து செயற்பட்டு தாயகம் நோக்கிய பயணத்தில் வீறுநடையுடன் பயணிக்க வேண்டும்.

நன்றி :- தாரகம் இணையம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button