ட்ரம்ப் சர­ண­டைவார்; ஆனால் ஆஜ­ரா­க­மாட்டார்

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், நாளை சர­ண­டைவார் என கூறப்படும் அதே­வேளை, அவர் நீதி­மன்­றத்தில் கைவி­லங்­குடன் ட்ரம்ப் ஆஜ­ரா­க­மாட்டார் என அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஆபா­சப்­பட நடிகை சர்ச்சை

ஆபா­சப்­பட நடிகை ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு 2016 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ட்ரம்ப் தரப்­பினால் 130,000 டொலர்கள் வழங்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பாக ட்ரம்ப் மீது கிரி­மினல் வழக்கு விசா­ரணை நடத்­து­வ­தற்கு நியூயோர்க் ஜூரிகள் குழாம் அங்­கீ­காரம் அளித்­தது.

23 642a67c540467 1

டொனால்ட் ட்ரம்­புக்கு எதி­ரான விசா­ரணை நியூயோர்க் நேரப்­படி நாளை பிற்­பகல் 2.15 (இலங்கை நேரப்­படி இரவு 11.45) மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

தற்­போது புளோ­ரிடா மாநி­லத்தில் தங்­கி­யுள்ள ட்ரம்ப், தனது சொந்த விமானம் மூலம் இன்று நியூயோர்க் செல்வார் எனவும், அவர் அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைவார் எனவும் தன்னை அடை­யாளம் காட்­ட ­விரும்­­­பாத, அமெ­ரிக்க சமஷ்டி அரச அதி­­­காரி ஒருவர் சிபிஎஸ் அலை­வ­ரி­சை­யி­டம் தெரி­வித்­துள்ளார்.

பொது­வாக, பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான சந்­தேக நபர்­க­ளுக்கே கைவி­லங்­கி­டப்­படும் என கூறி­யஅந்த அதி­காரி எனினும் ட்ரம்­புக்கு கைவி­லங்கு போடப்­பட மாட்­டாது.

வழக்கு உலகின் கவ­னத்தை ஈர்த்த ட்ரம்ப் வழக்கு

இதே­வேளை, நாளை அவர் நீதி­மன்றில் சர­ண­டை­யக்­கூடும் ஆனால் எதுவும் நிச்­ச­ய­மில்லை என டொனால்ட் டரம்பின் சட்­டத்­த­ரணி ஜோ டகோ­பினா கூறி­யுள்ளார்.

23 642a67c5901d7

அத்துடன் தான் நிர­ப­ராதி என வாதா­டுவார் எனவும் டகோ­பினா கூறி­யுள்ளார். 76 வய­தான டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்ள நிலையில் இவ்­வ­ழக்கு தனக்கு எதி­ரான அர­சியல் உள்­நோக்­க­மு­டை­யது என அவர் கூறி­வ­ரு­கிறார்.

அதே­வேளை, ட்ரம்ப் மீதான வழக்கு குறித்து ஜனா­தி­பதி ஜோ பைடன் நேற்­று­முன்­தினம் கருத்து தெரி­விக்க மறுத்­துள்ளார்.

மேலும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி எவரும் இதற்கு முன்னர் குற்­ற­வியல் வழக்கை எதிர்­கொண்­ட­தில்லை. இதனால் ட்ரம்ப் மீதான வழக்கு உலகின் கவ­னத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button