சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : கைதுக்கு பின்னர் பிணை..!

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : கைதுக்கு பின்னர் பிணை..!

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : கைதுக்கு பின்னர் பிணை..! சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முதல் இணைப்பு

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30.11.2023) சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக 3 பேர் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுவிஸிலிருந்து

அகதித் தஞ்சம் நிராகரிப்பு
இலங்கை நேரத்தின் படி காலை 10 மணியளவில் இலங்கைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இருவர் உள்ளடங்களாக மூவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2015ஆம் ஆண்டளவில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரப்பட்ட நிலையில் அவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button