சீமான் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்த சென்னை நீதிமன்றம்!

சீமான் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்த சென்னை நீதிமன்றம்!

சீமான் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்த சென்னை நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(seeman) மீதான வழக்குக்குசென்னை உயர்நிதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை தரமணியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர் எழுச்சி கூட்டம் நடைபெற்றது . அந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழீழம் பற்றியும் ,மணிப்பூர் ,நாகாலாந்து மாநிலத்தில் நிலவும் சூழலை குறித்தும் ,நியூட்ரினோ திட்டம் ,சென்னை – சேலம் 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்.

சீமான்

இதையடுத்து சீமானின் இந்த பேச்சு இரு பிரிவினருக்கும் ஏதிராக மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தரமணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சீமான் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை நீதிமன்ற நிதிபதி எம் .நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராவதில் இருந்தும் விளக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button