சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

நடிகர் வடிவேலு ஆரம்ப காலத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நிறைய ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

இவருக்கு படவாய்ப்புகளும் மிக வேகமாக அதிகரித்தது. நகைச்சுவையில் வெளியாகிய அனைத்து காட்சிகளுமே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதல்ல. அந்த அளவிற்கு நகைச்சுவை காட்சிகளில் வடிவேலு கலக்கியிருப்பார்.

இவருக்கு பெரிதும் பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் என்றால் அது சின்ன கவுண்டர் தான். இந்த திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.

படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தவுடன் நடிகர் விஜயகாந்துக்கு வடிவேலுதான் கால் அமுக்கி விடுவார் என்று நடிகர் தியாகு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக சினிமாவில் பணியாற்றி வந்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் படங்களில் இணையவில்லை.
வடிவேலு தற்போது வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாக மாறி விட்டது. விஜயகாந்தும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *