சஹ்ரான் குழுவினர் திட்டமிட்ட இரண்டாவது தாக்குதல்

சஹ்ரான் உள்ளிட்ட அடிப்படைவாத குழுவினர் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமது இரண்டாவது தாக்குதலை திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டி ஹெசல பெரஹெர ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்படும் 700 அடிப்படைவாதிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் 300 அடிப்படைவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *