கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள்… 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

கோழி இறைச்சி மூலம் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பரவுவது தெரியவந்துள்ளதையடுத்து, கோழி மாமிசத்தை கவனமாக கையாளுமாறு ஜேர்மன் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

ஆறு ஜேர்மன் மாகாணங்களில், 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Robert Koch நிறுவனம் முதல், பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வரை, பல அமைப்புகள் ஜேர்மனியில் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா கிருமி தொற்று தொடர்பாக விசாரித்து வருகின்றன.

கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள்… 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இறைச்சியை சரியான வெப்ப நிலையில் வேகவைக்கும்போது இந்த நோய்க்கிருமி கொல்லப்பட்டுவிடும். ஆனால், இறைச்சியை கழுவும்போதும், மசாலா பொருட்களை சேர்ப்பதற்காக இறைச்சியை பாத்திரத்தில் வைத்திருக்கும்போதும், இந்த கிருமிகள் கைகளிலும் பாத்திரத்திலும் பரவ வாய்ப்புள்ளது.

அந்த பாத்திரங்கள் மற்றும் கையிலிருந்து வேறு உணவுகளுக்கு அந்த கிருமி பரவவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, மக்கள், பச்சை இறைச்சியை மற்ற உனவுப்பொருட்களுடன் வைக்காமல் தனியாக சேமித்துவைக்குமாறும், தனியாக சமைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், இறைச்சியை கழுவியபின், கைகளையும் பாத்திரங்களையும் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரால் நன்றாக கழுவுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *