கொஞ்சம் கொஞ்சமாக ஒளிர ஆரம்பிக்கும் டார்ச்லைட் – மகிழ்ச்சியில் கமல்.!!

கொஞ்சம் கொஞ்சமாக ஒளிர ஆரம்பிக்கும் டார்ச்லைட் – மகிழ்ச்சியில் கமல்.!! தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் தன்னுடைய தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

முதன் முறையாக தமிழக தேர்தலில் களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் எதிபார்த்த அளவிற்கு வாக்குகளை பெறவில்லை என்றாலும், பரவாயில்லை என்கிற அளவிற்கு வாக்குகளைப் பெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி!

இருப்பினும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தொடர்ந்து காலை முதல் முன்னிலை வகித்து வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சம் கொஞ்சமாக ஒளிர ஆரம்பிக்கும் டார்ச்லைட் – மகிழ்ச்சியில் கமல்.!!

இவர் சற்று முன் வரை 2,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மேலும், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 118 இடங்களில் முன்னிலையும், அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.

இதனால் திமுகவினர் இப்போதே தங்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *