குழந்தைகளுக்கு தொண்டையில் மீன்முள் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு தொண்டையில் மீன்முள் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு தொண்டையில் மீன்முள் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

எனது விருப்ப உணவுகளில் மீனிற்கே முதலிடம். அதுவும் பொறித்த மீன் என்றால் கேட்கவே வேணாம், தட்டு காலியாவது நிச்சயம். பொதுவாக வஞ்சிரம் போன்ற பெரிய, முள்ளில்லாத மீன்களை விட சிறிய வகை மீன்களின் சுவை சற்று தூக்கலாக இருக்கும்.

மீன் சாப்பிடுவது ஒரு கலை. மீனுக்கு பொதுவாக தலைப்பகுதியை ஒட்டிய செவுள் பகுதியில் தான் முள் அதிகமாக இருக்கும். மீனின் வால் பகுதியில் முள் குறைந்த அளவே இருக்கும்.

குழந்தைகளுக்கு

நான் சிறுவனாக இருந்தபோது எப்போதும் வால் பகுதி மீன் தான் எனக்கு தருவார்கள். பொறித்த, குழம்பு மீனை உடையாமல் அதை நடுமுள்ளில் இருந்து இரண்டாக பிரித்து, இரு ஓரத்தில் இருக்கும் சிறிய செதில் முள்ளை நீக்கிவிட்டால் முள்ளில்லா மீன் ரெடி..பயமில்லாமல் சாப்பிடலாம்..

நான் சிறுவனாக இருந்த வரையில் எனக்கு என் பாட்டிதான் மீனுக்கு முள் எடுத்து தருவார். நானே முள் எடுத்துக்கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அழகாக மீனை பிரித்து வைத்தது போல இருக்கும்.

நானும்கூட இப்போதும் என் மகளுக்கு மீனுக்கு முள் எடுத்துக்கொடுக்கிறேன். அதை சாக்காக வைத்து பாதிமீனை நானே சாப்பிட்டுவிடுவது உங்களுக்கு அவசியமற்ற தகவல் (முள்ளு மீனு பாப்பா தொண்டையில சிக்கிக்க கூடாது என்கிற நல்ல எண்ணம்தான் காரணம்.).

குழந்தைகளுக்கு

அதையும் மீறி முள் தொண்டையில் சிக்கிக்கொண்டால், கால்வாசி வாழைப்பழத்தை மெல்லாமல் அப்படியே விழுங்கச்சொல்லுவார்கள். அல்லது ஒரு கைப்பிடி அளவு சோறை நன்றாக கெட்டியாக பிசைந்து விழுங்கச்சொல்லுவார்கள்.

செங்கனி மீனின் சினையை சாப்பிட்டிருக்கீர்களா?

மீன் சாப்பிடும்போது முள் தொண்டையில் குத்திவிடுமே என்று யாராவது அச்சப்பட்டால், வாங்கிய அந்த மீனை எனக்கு அனுப்புவிடுமாறு மிகவும் பணிவென்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *