காண்டா மிருகத்தின் கொம்பில் இருக்கும் அதீத சக்தி..? அறியாத தகவல்.!!

வணக்கம் உறவுகளே… இந்தப்பதிவில் விலங்குகள் பற்றிய சில அரிய தகவல்கள் கொடுக்கப்படுகிறது. இந்த தகவல்கள் பிடித்திருந்தால் அல்லது புதிதாக இருந்தால் உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆதரவுக்கு மிக்க நன்றி.

உங்கள் வீட்டின் நடுவில் மலம் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதை உடனே அகற்றி விடுவீர்கள் அல்லவா?

அதே போல் காண்டா மிருகத்தின் கொம்பில் சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து உடனேயே தூக்கி வீசி விடுங்கள்.

காண்டா மிருகத்தின் கொம்பில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண்மையைக் கூட்டும் என்ற மூட நம்பிக்கை சீனப் பணக்காரக் கிழவர்களிடையே இருப்பதால் இன்று ஆப்பிரிக்காவில் காண்டா மிருகம் ஆயிரக் கணக்கில் கொல்லப் படுகின்றன.

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .

உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆதரவுக்கு மிக்க நன்றி.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *