கல்லறை ஒன்றில் கிடைத்த உலகின் மிகவும் பழமையான தங்கம்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்

கருங்கடல் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கல்லறை ஒன்றிலிருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளமை தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கல்லறை, கிடைத்த, உலகின் மிகவும் ,பழமையான தங்கம், அதிர்ச்சியில், ஆய்வாளர்கள்

வெர்னா நெக்ரோபோலிஸ் பகுதியிலே கல்லறைகளில்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கக் கலைப்பொருட்கள் மற்றும் நகைகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அங்கே கல்லறைகளில் தங்கம் கண்டறியப்படுவது முதல் முறை அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 1972 இல் தொழிற்சாலை கட்டுமான பணிகளிற்காக பள்ளம் தோண்டிய வேளை தங்க ஆபரணங்கள் தென்பட அது தொடர்பில் தொல்லியல் துறையினருக்குத் தகவல் வழங்கபட்டுள்ள நிலையில் தொல்லியல் துறையினர் முன்னெடுத்த அகழாய்வின் போது பல கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

கல்லறை, கிடைத்த, உலகின் மிகவும் ,பழமையான தங்கம், அதிர்ச்சியில், ஆய்வாளர்கள்

மேலும், அங்கு கல்லறை எண் 43 இல் 6.5 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் கலைப்பொருட்களும் நகைகளும் காணப்பட்டுள்ளதுடன் அதுவே உலகின் மிகவும் பழைய தங்கம் என்றும் அது மன்னரதோ அல்லது தலைவரதோ கல்லறையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

கல்லறை, கிடைத்த, உலகின் மிகவும் ,பழமையான தங்கம், அதிர்ச்சியில், ஆய்வாளர்கள்

அத்தோடு கல்லறை எண் 36 இல்,ஆய்வாளர்கள் கிரீடம், காதணி, நெக்லஸ், பெல்ட், பிரேஸ்லெட் என்று 850 வகையான தங்கப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து ரேடியோகார்பன் டேட்டிங் மூலம் இவை செப்புக் காலத்தைச் சேர்ந்தவை என்றும், கிமு 4560-4450 காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளனர்.

https://youtu.be/eft8Rv-yfzM

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button