உடலுக்கு நன்மையை தரும் பழச்சாறுகள்: காலையிலேயே அசத்தல் டிப்ஸ் இதோ.!

உடலுக்கு நன்மையை தரும் பழச்சாறுகள்: காலையிலேயே அசத்தல் டிப்ஸ் இதோ.!

நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனிநபரின் தலையாய கடமை ஆகும். ஏனெனில் உடல் நலமுடன் இருந்தால் மட்டுமே, நமது மனமும் நலமுடன் இருக்கும்.

உடல்-மனம் இரண்டும் ஒத்துழைத்து இயங்கினால், எதையும் நம்மால் சாதிக்க இயலும். அந்த வகையில், இன்று பழச்சாறுகள் மற்றும் அதில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.

ஆரஞ்சு பழச்சாறு: நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் உடலுக்கு வழங்கும் ஆரஞ்சு பழச்சாறு, உடலை சுறுசுறுப்புடன் வைக்க உதவி செய்யும். அல்சரை குணப்படும். வைட்டமின் பி, சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை உடலில் இருக்கும் தேவையற்ற நச்சை வெளியேற்றும். நரம்பு மண்டலம் அமைதிப்படும். எலும்பு பிரச்சனை சரியாகும்.

பழச்சாறுகள்
பழச்சாறுகள்

அன்னாசி பழச்சாறு: அன்னாசியில் இருக்கும் வைட்டமின் பி, சி செரிமான மண்டலத்தை சீர்படுத்தும், இரத்தக்குறைபாடு மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இருமலையும் கட்டுப்படுத்தும். கேடான கொழுப்பு உடைய இருந்து வெளியேற்றப்படும். தொப்பை இருப்பவர்கள் கட்டாயம் குடிக்கலாம்.

பப்பாளி பழச்சாறு: வைட்டமின் ஏ, சி, போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், இரும்புசத்து, நார்சத்து ஆகியவை நிறைந்து கிடைக்கின்றன. இதனை தினமும் உணவில் சேர்த்துவர நோயில்லாத வாழ்வு கிடைக்கும்.

திராட்சைப்பழச்சாறு: மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிப்பதில் முக்கிய பங்கு கொண்ட திராட்சை பழச்சாறு, தினமும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கப்பட வேண்டும். ஒற்றை தலைவலி, ஆஸ்துமா போன்றவற்றைக்கும் திராட்சை குணப்படும். நுரையீரலுக்கு நன்மை சேர்க்கும். இதய நோயாளிகள் அளவுடன் எடுப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button