இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி விண்கல் மழை பொழியும்

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி விண்கல் மழை பொழியும்

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி விண்கல் மழை பொழியும் எதிர்வரும் 14ஆம் திகதி ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவின் உச்சக்கட்டத்தை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

14ஆம் திகதி இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட தெரிவித்தார்.

விண்கல் மழை
விண்கல் மழை

ஜெமினிட்ஸ் விண்கற்கள் பொழிவு இந்த ஆண்டின் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

வளிமண்டலத்துடன் சிறுகோள் துண்டுகள் மோதுவதால், பைதான் என்ற சிறுகோளின் குப்பைகள் வழியாக பூமி கடந்து செல்வதால், ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவைக் காணலாம் என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button