இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்ற படகு விபத்து! 43 பேர் பலி.!

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்ற படகு விபத்து! இத்தாலியின் பிரதான நிலப்பகுதியான தெற்கு கடற்கரையில் படகு உடைந்ததில் சுமார் 30 புலம்பெயர்ந்தோர் நீரிழ் மூழ்கியதாக கூறப்படுகிறது.

குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

படகு விபத்து

சுமார் 100இற்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலோரக் காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் இணைப்பு

இத்தாலியில் குடியேறிகளை அழைத்துச் சென்ற மரப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தைகள், குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த படகு இன்று அதிகாலை கலாப்ரியா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் மூவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1677419176120

அதேநேரம் மீட்பு பணியாளர்கள் 80 பேரை காப்பாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, மனித கடத்தல்காரர்கள் மீது குற்றம் சாட்டினார். பாதுகாப்பற்ற இவ்வகை பயணங்கள், மனிதாபிமானமற்றது என அவர் விமர்சித்துள்ளார்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களை குறைக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button