ஆளுனர் தனது பதவியைத்தக்க வைக்க தமிழர் மீதான திட்டமிட்ட இன அழிப்பிற்கு துணைபோகிறார்

வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா தனது ஆளுனர் பதவியைத்தக்க வைத்துக்கொள்வதற்காக பேரினவாதத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்பிற்கு  துணைபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 செல்வராசா கஜேந்திரன்

யாழ் மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய நாவலர் கலாசார மண்டபம் என்பது தமிழர்களுடைய பூர்வீக அடையாளங்களில் ஒன்று அந்த வரலாற்று அடையாளத்தை புத்தசாசன அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களமொன்றிற்கு கழங்குவதன் மூலமாக படிப்படியாக சிங்கள பௌத்த ஆதிக்கத்தினுடைய விரிவாக்கத்திற்கு உதவுகின்ற நோக்கத்தோடு வடக்கு ஆளுனர் எதேட்சாதிகாரமாக முடிவெடுத்து அதனை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த  நிலைமையிலே அவருடைய இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்றையதினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலே இங்கே கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆளுனருடைய இந்த தான்தோன்றித்தனமான இனவாதத்திற்கு எடுபிடியாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அவர் தன்னை ஒரு தமிழனாகக் கூறிக்கொள்கின்ற பொழுதிலும் ஒரு இனத்தினுடைய கருவை அறுத்து இனத்தினுடைய குரல்வளையை நசுக்கி  இனத்தினுடைய இரத்தத்திலும் அவலத்திலும் பதவி சுகங்களை அனுபவிப்பதற்காக மீண்டும் ரணிலுடைய பாதங்களை கழுவி பணிவிடை செய்து  பேரினவாதத்தை திருப்திப்படுத்தி மிண்டும் இந்த பதவிகளில் நீடிப்பதற்காக இவ்வாறானதொரு அநாகரீகமான செயல்பாட்டில் ஈடுபடுகின்றார். அதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களை கொதித்தெழ வைத்து மீண்டும்  வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலைமைக்கு தான் மீண்டும் மீண்டும் தள்ளி கொண்டிருக்கின்றது.

யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளுக்கு பின்னரும் இதுதான் நிலைமை.  இந்த தமிழ்த்தரப்பில் இருந்து கொண்டு 13ஆம் திருத்த சட்டத்தை தொடக்க புள்ளியாக கொள்ளுவோம் என்று சொல்லுகின்ற இந்திய அடிமைகள் இந்த விடயங்களை கண்டு கொள்வது கிடையாது.

இந்த 13ம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம்  இந்திய கூலிகள் எங்கே மாவட்ட இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை மக்களுடைய தலைவிதி என்பது நாடும் பொழுதும் 24 நியமிக்கப்பட்டிருக்கின்ற இந்த ஆளுனர் இந்தமாதிரியான அழிவு நடவடிக்கைகளைச்செய்கின்ற பொழுது அந்த இந்திய கூலிகள் எங்கே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மக்களுடைய தலைவிதி 24 மணி நேரமும் தங்களுடைய உரிமைக்காக போராட வேண்டும் என்கின்ற ஒரு துரதிஷ்டவசமான ஒரு சூழலைத்தான் தோற்றுவித்திருக்கின்றது.  இந்த செயல்பாடுகளை ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இல்லை என்று  சொன்னால் மக்கள் பெருமளவில்  திரண்டு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுகின்ற நிலைமை ஏற்படும் என்பதை நாங்கள் மிகவும் பொறுப்புணர்வோடு  சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

மத்திய அரசினுடைய அரச  இயந்திரங்களாக இருக்கக்கூடிய புத்தசாசன அமைச்சு, தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்புத்திணைக்களம் உள்ளிட்ட சகல திணைக்களங்களும் வடக்கு கிழக்கிலே ஒரு ஆக்கிரமிப்பு   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அது போன்ற மகாபலி அபிவிருத்தி அதிகார சபையும் வடக்கு கிழக்கிலே இன்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தான் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பிலே மாதுருஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் என்ற பொயரிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பாரியஒரு சிங்களக்குடியேற்றமொன்றை மெற்கொள்வதற்காக 3 லட்சம் மாடுகள் பராமரிக்கப்பட்டுவந்த மயிலத்தமடு மாதவனைப்பகுதிகளிலிருந்த தமிழ்ப்பண்ணையாளர்கள் கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிட்டு அவர்களுடைய மாடு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவில் கடந்தவாரம் எங்களுடைய விவசாயிகள் தாக்கப்பட்டுஅவர்களுடைய நிலங்கள் மகாவலியின் ஒத்துழைப்போடு பேரனவாதிகளால் கையகப்படுத்தப்படுகின்ற நிலைமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தாயகத்தில் தமிழர்கள் மீது இவ்வாறு அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்க, 13ம் திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பதவிக்கு வந்த ஆளுனர் ஒரு தமிழனாக இருந்தும் அவர் பேரினவாதத்தை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்த இனவழிப்பு செயற்பாடுகளுக்கு துணைபோவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button