அமெரிக்க வரலாற்றில் எந்த நிறுவனமும் வழங்காத தொகை; ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்த அறிவிப்பு!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க ரூ. 890 கோடி இழப்பீடாக வழங்க உள்ளது.

குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூ, எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன்.

23 642d6defc1f78
உலகம் முழுவதிலும் பிரபலம்

இதன் தயாரிப்புகள் உலகம் முழுவதிலும் பிரபலம். இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட்டுள்ளதாவும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் , நுரையீரல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதிக்கும் புற்றுந்நோய்களும் ஏற்படுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளனர். கிட்டதட்ட 60,000 வழக்குகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.
23 642d6df01ba9d

இந்நிலையில் ‘பல ஆண்டுகள் வழக்குகளுக்கு எதிராக வாதாடுவது, செலவுகளை அதிகப்படுத்தும். மேலும் அதிக தொகை செலவாகும்’என்று அந்நிறுவனத்தின் துணை தலைவர் எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்குகளை முடித்து வைக்க, ரூ.890 கோடி வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த முடிவை அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அந்நிறுவனத்தின் பங்குகள் 3 % அதிகரித்தன.

அதேவேளை அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button