அத்துமீறி மதவழிபாட்டில் ஈடுபடும் பிரிவினருக்கு எதிராக போராட்டம்

 அத்துமீறி மதவழிபாட்டில் ஈடுபடும் பிரிவினருக்கு எதிராக போராட்டம்

யாழ். அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி நெசவுசாலை முன் இன்று (11.04.2023) காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Jaffna SL Protest Northern Province of Sri Lanka

நெசவுசாலையானது யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரியவருகிறது. அதன் பின்னர் அந்த கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

மதஸ்தலத்தினால் அதிகளவு சத்தத்தை ஏற்படுத்தப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடாவடி செய்யும் மதப்பிரிவே வெளியேறு, ஊடகங்களை அச்சுறுத்தாதே, இளைஞர்களின் தொழில் வாய்ப்பை பறிக்காதே, பொதுமக்கள் சொத்தில் மதம் வளர்க்காதே போன்ற பதாகைகள் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Jaffna SL Protest Northern Province of Sri Lanka

Jaffna SL Protest Northern Province of Sri Lanka

நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழலில் இடம்பெறும் ஒலி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்காவும் அமைந்துள்ள மதஸ்தலம் அகற்றப்பட வேண்டும் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Jaffna SL Protest Northern Province of Sri Lanka

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button