அடுத்தவாரம் எம்.பியாகிறார் ரணில்? தலைமைப்பதவியிலும் நீடிப்பார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் தற்போதைக்கு மாற்றம் வராது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனவே, ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அம்மாநாட்டின்போது கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிரதித் தலைவராக செயற்படும் ருவான் விஜேவர்தனவின் செயற்பாடுகளில் திருப்தி இருக்கின்றதென கட்சி உறுப்பினர்கள் கருதும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டு மாநாட்டின்போது அவரிடம் கட்சித் தலைவர் பதவி ஒப்படைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாவிட்டால் பிரிதொரு நபரிடம் தலைமைப்பதவி கையளிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறித்து, புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையில் ஐ.தே.க. சட்டக்குழு ஈடுபட்டுவருகின்றது.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *